விருதுநகர்,
மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி விருதுநகரில் 4 வழிச்சாலையிலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக போராட்டம் நடத்தியதாக ஒண்டிப்புலி வருவாய் ஆய்வாளர் காஜா கரீம் நிவாஸ் கொடுத்த புகாரின் பேரில், பட்டாசு தொழிலாளர்கள் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன், கண்ணன், சுப்புராம், தட்சிணாமூர்த்தி, முத்து, ஞானம், செல்வம், குருநாதன், மூக்கையா சூரார்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, துரைசாமிபுரத்தை சேர்ந்த கணேசன், மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாண்டி, குமார், சுந்தர், ராஜா மற்றும் 500 பேர் மீது சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.