மாவட்ட செய்திகள்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்; திருவள்ளூர் கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையமும், நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற வாலிபர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் நோக்குடன் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

இந்த முகாம் வருகிற 27-ந் தேதி காலை 9 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும்.

இதில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு