மாவட்ட செய்திகள்

சொத்து தகராறில் தாய்-மகள் வெட்டிக்கொலை அண்ணன், தம்பியிடம் விசாரணை

பழனி அருகே, சொத்து தகராறில் தாய்-மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அண்ணன், தம்பியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெய்க்காரபட்டி,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சொத்து தகராறு

பழனி அருகே உள்ள சின்னக்கலையம்புத்தூர் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் திருமலைசாமி. இவருடைய மகன்கள் மாரிமுத்து (வயது 55), தண்டபாணி (50). விவசாயிகள். மாரிமுத்துக்கு திருமணமாகி தனலட்சுமி (48) என்ற மனைவியும், செல்வி (23) என்ற மகளும் உள்ளனர். தண்டபாணிக்கு பொன்மணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

அண்ணன்-தம்பி இருவருக்கும் பூர்வீக சொத்து உள்ளது. இதில், தனக்கு சேரவேண்டிய சொத்தை தம்பிக்கு கொடுக்க மாரிமுத்து முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு, தனலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்த மாரிமுத்து, தனது வீட்டருகே வசிக்கும் தம்பி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதையடுத்து கணவருக்கு சேரவேண்டிய சொத்தை தனக்கும், தனது மகளுக்கும் வழங்க வேண்டும் எனக்கோரி கோர்ட்டில் தனலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தனலட்சுமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் சொத்து தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என்று பயந்த தண்டபாணி, அண்ணியையும், அண்ணன் மகளையும் கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு மாரிமுத்துவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலை தனலட்சுமி தோட்டத்தில் உள்ள மாட்டுக்கொட்டகைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். வீட்டருகே வந்த போது, அங்கு ஏற்கனவே அரிவாளுடன் மறைந்திருந்த தண்டபாணி அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தார். படுகாயமடைந்த தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த செல்வியையும் அவர் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் தனது அண்ணனுடன் அவர் மாயமானார். சம்பவம் குறித்து அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கட்ராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மாரிமுத்துவையும், தண்டபாணியையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினையில் தாய்-மகள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று இரவு பழனி அருகே தலைமறைவாக இருந்த தண்டபாணியை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்