மாவட்ட செய்திகள்

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. உள்பட பல்வேறு அமைப்பினர் கைது

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

அயோத்தியில் ராமர்கோவில் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்று வரும் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல மாவட்டத்தில் இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகரன் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்ற 49 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி தலைமையில் அக்கட்சியினரும், த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 120 பேர் மறியல் செய்ய முயன்று கைது செய்யப்பட்டனர்.

அதேபகுதியில் தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் தமிழ்முருகன் தலைமையில் 16 பேர் மறியல் செய்ய முயன்று கைது செய்யப்பட்டனர். இதேபோல பரமக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் த.மு.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னனியினர் மொத்தம் 56 பேர் மறியல் செய்ய முயன்று கைது செய்யப்பட்டனர்.

இதேபோல பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன், நகர் செயலாளர் சேது கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்துரைச்சாமி, மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகேசன், நகர் இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார், மாவட்ட பிரதிநிதி சேதுபதி, மாணவரணி துணை அமைப்பாளர் ராமபாண்டி, நகர் மாணவரணி துணை அமைப்பாளர்கள் வினோத் கண்ணன், சேக் முகமது உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி பஸ்நிலையம் அருகில் த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்டு ஆப் இந்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்தந்த அமைப்பின் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு