மாவட்ட செய்திகள்

எஸ் எஸ் எல் சி மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை

கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

கொரோனா காரணமாக இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. எனவே பள்ளி அளவில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கமாக மாணவர்களுக்கு பள்ளியிலேயே தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும்.

ஆனால் கொரோனா காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது கொடுத்த செல்போன் எண்ணுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் லிங்க் அனுப்பி வைக்கப்பட்டது.

பதிவிறக்கம்

அதன்மூலம் பல மாணவர்கள் தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். ஒரு சில மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து இருந்தனர் அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்