இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, பசுமை வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி 184 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.