மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 10 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் 10 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் கிரண்குராலா தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாச் மாதம் 25ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டு சென்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்ட தளர்வுகளுடன் வருகிற 28-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு கலெக்டர் கிரண்குராலா நேரில் சென்று கோரிக்கை மனுவவை பெற்றார். இதனைத்தொடர்ந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி உள்ளிட்ட 173 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரத்தினமாலா, தனித்துணை கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சிவக்கொழுந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமார், வேளாண்மை இணை இயக்குநர் ஜெகநாதன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு