மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதி அருகே எண்ணெய் குழாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

குடியிருப்பு பகுதி அருகே எண்ணெய் குழாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எண்ணெய் குழாய்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணெய் நிறுவனம் சார்பில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எல்.எண்டத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி அருகே குழாய் புதைக்க பள்ளம் தோண்டப்பட்டது.

மறியல்

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்திரமேரூர் எல்.எண்டத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு