மாவட்ட செய்திகள்

காசிமேடு பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

காசிமேடு பகுதியில் இரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு தண்டையார்நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கடந்த 4 நாட்களாக தண்டையார்நகர் மெயின் தெருவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இரவில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த மக்கள், இது குறித்து பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும், தொடர்ந்து இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வந்தது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தொடர் மின்வெட்டை கண்டித்து நேற்று அதிகாலை ஜீவரத்தினம் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ராயபுரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்