புதுச்சேரி,
கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. மானவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரிக்கு உட்பட்ட அனைத்து பிராந்தியங்களிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் மாகே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் நிலை குறித்து கேரளா மற்றும் ஆந்திர பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்களின்படி அறிவிக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.