மாவட்ட செய்திகள்

கல் குவாரியில் 100 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்து டிரைவர் பலி

அன்னவாசல் அருகே கல் குவாரியில் உள்ள 100 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

நார்த்தாமலை,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள எல்லையாப்பட்டியில் கல்குவாரி ஒன்று உள்ளது. அந்த குவாரியில் துளையிடுவதற்காக கம்பரசர் ஒன்று டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேலை முடிந்தபின் நேற்று முன்தினம் மாலை குவாரியில் இருந்து அந்த டிராக்டர் மேலே செல்வதற்காக புறப்பட்டது. அந்த டிராக்டரை எல்லையாப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் பால்ராஜ் (வயது 27)ஓட்டினார். அப்போது அந்த டிராக்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் நிலை தடுமாறி கல் குவாரியில் உள்ள 100 அடி பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியது.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் கிடந்த பால்ராஜை மீட்டனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னவாசல் அருகே 100 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்து டிரைவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு