மாவட்ட செய்திகள்

லாரி மோதியதில் ரெயில்வே சிக்னல் கம்பம் சாய்ந்தது

லாரி மோதியதில் ரெயில்வே சிக்னல் கம்பம் சாய்ந்தது

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் 7, 8-வது நடைமேடை குட்ஷெட் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று சரக்கு ரெயிலில் ரேஷன் அரிசி வந்தது. லாரிகள் மூலம் ரேஷன்அரிசி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அரிசி ஏற்ற வந்த ஒரு லாரி பின்னோக்கி சென்ற போது, 6-வது நடைமேடையில் உள்ள ரெயில்வே சிக்னல் விளக்கு கம்பத்தில் மோதியது. இதில் அந்த கம்பம் அடியோடு பெயர்ந்து கீழே சாய்ந்தது. 6-வது நடைமேடையில் என்ஜின் மட்டுமே நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிக்னல் கம்பம் சாய்ந்ததில், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. எனினும், ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக வந்து சிக்னல் விளக்கு கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது