மாவட்ட செய்திகள்

கூத்தாநல்லூர் அருகே வயல்களில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் வாய்க்காலில் வெள்ளம் போல சென்றது

கூத்தாநல்லூர் அருகே வயல்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மழைநீர் வாய்க்காலில் வெள்ளம் போல சென்றது.

கூத்தாநல்லூர்,

புரெவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள, குடியிருப்புகள், தாழ்வான பகுதிகள், விளை நிலங்களில் அதிக அளவில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பல இடங்களில் சம்பா நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால், விவசாயிகள் மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

இந்த நிலையில் மழை நின்றதால் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் விளை நிலங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். கூத்தாநல்லூர் அருகே உள்ள கல்லடி கிராமம் அருகே, விளை நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் வெள்ளம் போல் சென்றது. இதைப்போல பெரியகொத்தூர், நடுத்தெருவில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த தண்ணீரை அப்பகுதி மக்கள் வெளியேற்றினர். இந்த நிலையில் நேற்றும் கூத்தாநல்லூர் பகுதிகளில் சில இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் மீண்டும் மழை பெய்து விளை நிலங்கள் மூழ்கிவிடுமோ? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்