மாவட்ட செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 3 மாதத்தில் 33 பேருக்கு காது கேட்கும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவி திறன் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் காது, மூக்கு, தொண்டை மற்றும் பேச்சு கேள்வியல் துறையை சார்ந்தவர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் தலைமை தாங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 340 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து காக்ளியர் இம்பிளாண்ட் கருவி (காது கேட்கும் கருவி) பொருத்தப்பட்டுள்ளது. அதில் கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 3 மாதங்களில் 33 பேருக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்டால் ரூ.8 லட்சம் வரையில் செலவாகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகள் ஒரு வருடத்துக்கு பேச்சு மற்றும் கேள்வியல் துறையில் பேச்சு பயிற்சி மேற்கொள்வர். கொரோனா காலத்தில் மட்டும் 168 செயல்பாடு காது கேட்கும் கருவி இங்கு பொருத்தப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காது கேட்கும் கருவி பொருத்தப்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் துறை தலைவர் ஜெயா உள்ளிட்ட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு