மாவட்ட செய்திகள்

வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவர் கைது

வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சிவகங்கை,

சிவகங்கையை சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 42). இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி அருகில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது சுந்தரநடப்பு கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் (23) என்பவர் அங்கு வந்து, செந்தில்முருகனிடம் ஆட்டோவை வாடகைக்கு அழைத்தாராம்.

அதற்கு தனது ஆட்டோ வாடகைக்கு வராது என்று கூறி மறுத்து விட்டாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

அதில் ஆத்திரமடைந்த விமல்ராஜ், கீழே கிடந்த பாட்டிலை உடைத்து செந்தில் முருகனை சரமாரியாக குத்திவிட்டு, ஆட்டோவையும் அடித்து சேதப்படுத்தினாராம்.

அதில் பலத்த காயம் அடைந்த செந்தில் முருகன் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விமல்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு