மாவட்ட செய்திகள்

மரங்களின் மீது பொருத்தப்பட்டுள்ள விளம்பர ‘போர்டு’களை 15-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும்

சேலத்தில் மரங்கள் மீது பொருத்தப்பட்டுள்ள விளம்பர ‘போர்டு’களை வருகிற 15-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்,

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட வார்டு 17-ல் கிழக்கு தோட்டம் தெருவில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விளம்பர போர்டுகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரங்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விளம்பர போர்டுகளை அகற்றிய மரங்களின் மீது மீண்டும் விளம்பர போர்டுகளை பதிக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வருகிற 15-ந் தேதிக்குள், மரங்களின் மீது உள்ள அனைத்து விளம்பர போர்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தாமாக முன்வந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் மரங்களின் மீது பொருத்தப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்றப்படுவதோடு அதற்கான செலவின தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து வசூல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களின் மீது விளம்பர போர்டுகளை பொருத்தப்படாமல் பாதுகாக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்