திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் சரவண பொய்கை மலை அடிவாரம், மலை கோவில் படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் ஏறி வரும் பகுதி மற்றும் திருத்தணி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சன்னதி தெரு வழியாக பக்தர்கள் வரும் மலைப்பாதை பகுதி போன்ற இடங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்,
அப்போது அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக திருத்தணி முருகன் கோவில் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமையில் வருவாய்த்துறையினர், திருத்தணி நகராட்சி நிர்வாகத்தினர், போலீஸ் துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, சன்னதி தெரு பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அதேபோல் மலைக்கோவில் அடிவார பகுதியிலும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டது.