மாவட்ட செய்திகள்

கும்பகோணம் பஸ்நிலையம் அருகே அகற்றப்படாமல் கிடக்கும் குப்பைகள் விரைவில் சுத்தம் செய்ய கோரிக்கை

கும்பகோணம் பஸ் நிலையம் அருகே அகற்றப்படாமல் கிடக்கும் குப்பைகளை விரைவில் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

கும்பகோணம்,

கும்பகோணம் பஸ்நிலையத்தை சுற்றி பல தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. கும்பகோணம் பஸ்நிலையத்தின் வடக்குபுறத்தின் வழியாக ஜான்செல்வராஜ் நகர் செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகில் சிலர் குப்பைகளை பெரிய சாக்கு பைகளில் அடைத்து மலை போல் கொட்டி சென்று விடுகின்றனர். இதனால் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

அகற்ற கோரிக்கை

தற்போது மழைக்காலம் என்பதால் மழையில் குப்பைகள் நனைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். கும்பகோணம் நகராட்சி சார்பில் குப்பைகளை கொட்ட இடங்கள் வைத்திருந்தும் அந்த இடங்களில் கொட்டாமல் பொதுமக்கள் நடமாடும் மற்றும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் குப்பைகளை கொட்டி சென்று விடுகின்றனர். எனவே குப்பைகளை விரைவில் அகற்றி இந்த பகுதியில் மேலும் குப்பைகள் கொட்டாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது