மாவட்ட செய்திகள்

கோட்டூர் அருகே முள்ளியாற்றில் பழுதடைந்த பாலம் புதிதாக கட்டித்தர கோரிக்கை

கோட்டூர் அருகே முள்ளியாற்றில் பழுதடைந்த பாலத்துக்கு பதில் புதிய பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தட்டாங்கோவில் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தின் அருகே செல்லும் முள்ளி ஆற்றில் பாலம் கட்ட ப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தான் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி போன்ற நகரங்களுக்கு இப்பகுதி மக்கள் சென்று வருகிறார்கள்.

புதிய பாலம்

தற்போது இந்த பாலம் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழக் கூடிய அபாய நிலையில் உள்ளது.

இதனால் இந்த பாலத்தில் பயணிப்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த இந்தபாலத்தை அகற்றிவிட்டு 4 சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்