மும்பை,
மும்பையை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது உறவுக்கார வாலிபரால் கற்பழிக்கப்பட்டார். சமீபத்தில் அந்த சிறுமியின் அடிவயிற்று பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவர் 26 வார கர்ப்பிணியாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியாவை பொறுத்தமட்டில் 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்க சட்டத்தில் அனுமதி இல்லை.
ஆகையால், சிறுமியின் வயதை காரணம் காட்டி, அவருக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி சிறுமியின் பெற்றோர் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தொடரப்பட்டது. இதனை நேற்று பரிசீலித்த நீதிபதிகள், சிறுமியின் தற்போதைய உடல்நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கே.இ.எம். ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.