மாவட்ட செய்திகள்

ரூ.50 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

களக்காடு பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க வலியுறுத்தி, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ.விடம் பொதுக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இட்டமொழி,

களக்காடு பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க வலியுறுத்தி, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ.விடம் பொதுக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 14-வது நிதிக்குழு மானியம் மூலமாக, களக்காடு வடக்கு ரதவீதி, தெற்கு ரதவீதிகளில் ரூ.50 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது. ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், களக்காடு நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா, உதவி பொறியாளர் விஜயகுமார், நகர செயலாளர்கள் செல்வராஜ் (களக்காடு), பாபு (ஏர்வாடி), மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சாலமோன், நகர மகளிரணி செயலாளர் ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு ஊராட்சிக்கு உட்பட்ட மறவன்குளம், காலனி தெரு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்