மாவட்ட செய்திகள்

நெல்லையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஏசுராஜன், இணை செயலாளர்கள் முருகேசுவரி, ரவிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் பாபு வரவேற்று பேசினார்.

மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும், அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்களுக்கு வெளிமுகமை மூலம் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், துணை தாசில்தார் நிலையில் உள்ள பணியிடங்களை தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்களே தொடர வேண்டும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மைதீன் பட்டாணி, சங்கரநாராயணன், கற்பகம், மாரிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்