மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு காளை உள்பட 3 மாடுகள் இறப்பு குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை

அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உள்பட 3 மாடுகள் இறப்பு குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை.

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே உள்ள கா.தெக்கிக்களம் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மனைவி மூக்காயி. இவர் 7 மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் அழைத்துவந்து தண்ணீர் வைத்தபோது, ஜல்லிக்கட்டு காளை உள்பட 3 மாடுகள் அடுத்தடுத்து செத்தன. மேலும் 2 மாடுகள் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மூக்காயின் குடும்பத்தினர் அன்னவாசல் போலீசாருக்கும், வீரப்பட்டி வருவாய் துறையினருக்கும் தகவல் அளித்தனர். மாடுகள் எப்படி இறந்தது என்பது குறித்து போலீசாரும், வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாடுகளின் இறப்பு குறித்து அறிய கால்நடைத்துறை இணை இயக்குனர் இளங்கோவன், உதவி இயக்குனர்கள் பாண்டி, சாகுல் அமீது ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் மருத்துவர்கள் தினேஷ்குமார், பரமேஸ்வரி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் இலுப்பூர் தாசில்தார் முருகேசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், வருவாய் ஆய்வாளர் மகாலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த முடிவுகள் வந்தபிறகு மாடுகளின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு