மாவட்ட செய்திகள்

ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க 700 பேருக்கு அரிசி,உணவு பொருட்கள்: அமைச்சர் வழங்கினார்

தர்மபுரி பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க 700 பேருக்கு அரிசி, உணவு பொருட்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், உதவி கலெக்டர் தேன்மொழி, மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், நகராட்சி ஆணையாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 700 பேருக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தமிழகத்தில் 2,895 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க அரசு 5,450 டன் அரிசி வழங்கி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 29 பள்ளிவாசல்களில் 20 ஆயிரத்து 595 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 82 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தயாரிக்க 700 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பள்ளிவாசல் நிர்வாகிகள் அரசின் உத்தரவினை கடைபிடித்து ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்கும் அரிசியை தகுதியான குடும்பங்களுக்கு பிரித்து வழங்கி பயன்பெறுமாறு அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். இதில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், மாவட்ட சுன்னத் ஜமாத் செயலாளர் இக்பால், சுன்னத் ஜமாத் தலைவர் பாபு, மாவட்ட முத்தவல்லி சங்க தலைவர் ஜப்பார், செயலாளர் முஸ்தாக், சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் நியாஸ், பாபு, தாசில்தார் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்