இந்த நிலையில் பொதுமக்களின் புகாரை ஏற்று பழவேலி பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. அரசு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில் நடந்த இந்த பூமிபூஜையில் சிறப்பு அழைப்பாளராக செல்வம் எம்.பி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் நரேந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் அன்புச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டப்பணி நடந்து முடிந்தால் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.