மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் ரூ.1½ லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையத்தில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் நிலை கண்காணிப்புக்குழு பறக்கும்படை அலுவலர் சொல்லமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் காரில் இருந்த நாகராஜ் மற்றும் அவரது மனைவி வாணி ஆகியோர் ஊட்டிக்கு செல்வதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.

உடனே கண்காணிப்புக்குழு அலுவலர் சொல்லமுத்து பணத்தை பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனிடம் ஒப்படைத்தார்.

அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தாமணி தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை