மாவட்ட செய்திகள்

துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.10 லட்சம் தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து சென்னைக்கு ஜூஸ் தயாரிக்கும் கருவியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனா. அப்போது கடலூரை சோந்த அருள்ராஜ் சுப்பிரமணியன் (வயது 41) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி

விசாரித்தனர்.

ரூ.10 லட்சம் தங்கம்

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவரிடம், உடனடியாக ஜூஸ் தயாரித்து குடிக்கும் நவீன கருவி(ஜூசர் பாட்டில்) இருந்தது.அதன்மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், ஜூஸ் தயாரிக்கும் அந்த கருவியை பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அருள்ராஜ் சுப்பிரமணியனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு