மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

தேனியில் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி:

அல்லிநகரம் அருகே பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை. ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டாங்கரேவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் எனது மகன் பொன்ராம் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார். அவருக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக எழுமலை செல்லாயிபுரத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவரான செல்வலிங்கம் என்னிடம் கூறினார். அதை உண்மை என நம்பி கடந்த 2018-ம் ஆண்டு அவர் மற்றும் அவருடைய மகன் ராஜ்குமாரிடம் ரூ.12 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அவர்கள் பணி நியமன ஆணை ஒன்றை வழங்கினர். அது போலியானது என தெரியவந்தது. அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்ட போது எனக்கு மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அந்த மனு மீது விசாரணை நடத்தும்படி அல்லிநகரம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் செல்வலிங்கம், ராஜ்குமார் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்தார். தலைமறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்