மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி

வீரபாண்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி :

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த முருகன் மகன் ராஜேஸ் (வயது 28). இவர் நேற்று முன்தினம் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கடந்த ஆண்டு தனது உறவினரான தேனி அரண்மனை புதூரை சேர்ந்த கார் டிரைவர் கருப்பையா வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதற்காக முதலில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தேன். பின்னர் சென்னையை சேர்ந்த செண்பக கிரி என்பவரை அவர் அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பினேன். ஆனால் எனக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி, பணத்தை மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள செண்பககிரியை போலீசார் தேடி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு