மாவட்ட செய்திகள்

செங்குன்றம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி

செங்குன்றம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்துவிட்டு கணவன்-மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

தினத்தந்தி

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி பஞ்சவர்ண செல்வி(வயது 47). இவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். ஆனால் ஏலச்சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சுமார் ரூ.4 கோடி வரை மோசடி செய்துவிட்டு கணவன்-மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதுபற்றி விசாரிக்கும்படி அந்த புகார் மனு சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவன்-மனைவி இருவரையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் பஞ்சவர்ண செல்வி, மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். சோழவரம் போலீசார் பஞ்சவர்ண செல்வியை அழைத்து வந்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவர் ராமச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது