மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னரில் கடத்திய ரூ.45 லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரி மூலம் குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஷேசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர் ஆகியோரின் ஆலோசனையை பெற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

தனது நேரடி தலைமையிலான தனிபோலீஸ் படையை களத்தில் இறக்கினார். குட்கா கடத்தி வந்த கன்டெய்னரை சென்னை மயிலாப்பூர் பகுதியில் தனிப்படையினர் மடக்கி பிடித்தனர். கன்டெய்னரில் கடத்திவரப்பட்ட 5 டன் எடையுள்ள குட்கா போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவராஜ் (26), திருவண்ணாமலையை சேர்ந்த அரவிந்தன் (20), விருதுநகரை சேர்ந்த முத்துராஜ் (40) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட செந்தில், அவரது கூட்டாளி முனியப்பன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு