மாவட்ட செய்திகள்

பேரம்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட நல மாணவர் விடுதியில் ஆர்.டி.ஓ. ஆய்வு

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட நல மாணவர் விடுதியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

அப்போது அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் முட்டை தரமாக உள்ளதா என்று தயார் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த மாணவர்களிடம் கழிவறை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

மாணவர்களின் வருகை பதிவேடு, விடுதியில் உள்ள பொருட்களின் இருப்பு, மாணவர்களுக்கு சோப்பு, பாய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டிருப்பது குறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு