இதை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருகிறார்கள். அதேபோல் செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பவரை குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அதிபதி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர், கைதான தினேசிடம் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.