கோப்புப்படம் 
மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா அலுவலக வளாகத்தில் சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நில அளவை மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இங்கு பணிபுரியும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்ததும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் ஆறு பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று மாலை சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இருந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தின் கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டன. இந்த சோதனை இரவு வெகுநேரம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனை முடிவுற்ற பின்னரே லஞ்ச பணம் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்ற விவரம் தெரியவரும்.

இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்