மாவட்ட செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி, சாலைமறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 50 பேர் மீது வழக்கு

திருவாரூரில் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டானில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் 20-ந்தேதி கடந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை இதுவரை வழங்காததையும், இலவச பஸ் பாஸ் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் கல்லூரி முன்பாக மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை- நாகை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தநிலையில் திருவாரூர் தாலுகா போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி 2 பிரிவின் கீழ் மாணவர்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு