மாவட்ட செய்திகள்

கத்திரி வெயில் தொடக்கம்: நாமக்கல்லில் 102.2 டிகிரி பதிவானது

நாமக்கல்லில் கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளிலேயே 102.2 டிகிரி வெயில் பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாத நிலையில் ஜனவரி மாதம் முதலே வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள், சாலையோரம் உள்ள குளிர்பான கடைகளுக்கு சென்று குளிர்பானங்களை வாங்கி பருகுவதையும், இளநீர், நுங்கு மற்றும் தர்பூசணி போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதையும் பார்க்க முடிகிறது.

இதற்கிடையே நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கத்திரி வெயில் தொடங்கிய முதல்நாளான நேற்று நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானது. இதனால் அனல் காற்று வீசியது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

சாலைகளில் செல்வோர் குடைகள் பிடித்தவாறும், தலையில் துணியை போட்டபடியும் செல்வதையும் பார்க்க முடிந்தது. கல்லூரி மாணவிகள் துப்பட்டாவை தலையில் போட்டவாறு சென்றனர். பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு