மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் நேற்று பள்ளிப்பட்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியை கண்காணித்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்த முயன்ற திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பெருமாநல்லூரை சேர்ந்த மோகன் (வயது 40), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கணேசன் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்