மாவட்ட செய்திகள்

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட நடுப்புணி ரோடு சேர்வகாரன் பாளையத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் வாகனத்தில் வந்தவர் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மணிவேல் என்பது தெரியவந்தது.

ஆனால் ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று ஜமீன்முத்தூரில் நடந்த சோதனையில் காரில் ரியாஸ் என்பவரிடம் ரூ.60 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது