மாவட்ட செய்திகள்

ஆபாச குறுந்தகவல் அனுப்பி நடிகைக்கு தொல்லை

ஆபாச குறுந்தகவல் அனுப்பி நடிகைக்கு தொல்லை கொடுத்ததாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை,

மும்பை ஒஷிவாரா பகுதியில் 27 வயது துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்தேரி மேற்கில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு தினமும் சென்று வருவது வழக்கம். அப்போது, அவருக்கு விஸ்வநாத் ஷெட்டி என்ற வாலிபருடன் அறிமுகம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வநாத் ஷெட்டி நடிகையின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்-அப்பிலும் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ஏன் என்னை தொல்லை செய்கிறாய் என் குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார். இதற்கு நடிகையை அவர் விபசாரி என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நடிகை ஒஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல வேறொரு நடிகையை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்ததாக விஸ்வநாத் ஷெட்டிக்கு எதிராக அம்போலி போலீசில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் பணிபுரிந்து வரும் 26 வயது பெண் ஊழியரின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படத்தை மர்ம ஆசாமி ஒருவர், வாட்ஸ்-அப்பில் பரப்பி உள்ளார். மேலும் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி அந்த பெண்ணை விபசாரி என சித்தரித்து ஒரு செல்போன் எண்ணையும் பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்