மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் பரபரப்பு: மகனை விடுவிக்ககோரி போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தை

ஆம்பூரில் மகனை விடுவிக்ககோரி போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி.கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் பிரேம்குமார் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்கிரண் (27). இவர்கள் 2 பேரும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு ஆம்பூர் பஜார் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் பிரேம்குமார் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரை ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதனை அறிந்த பிரேம்குமாரின் தந்தை மணிகண்டன் தன் மகனை வீட்டிற்கு அனுப்பும்படி போலீசாரிடம் கூறினார். பின்னர் அவர் திடீரென போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார், உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு