விசாரணையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஷேக்ரகுமான் என்ற அப்துல் ரகுமான்(23) என்பவர் சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. மேலும் சிறுமி காஞ்சீபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வந்தபோது அவரிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் ஷேக்ரகுமானை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.