மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே செம்மரக்கட்டைகள் சிக்கின

உத்திரமேரூர் அருகே செம்மரக்கட்டைகள் சிக்கின.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் தோட்ட நாவல் கிராமத்தில் லாரி முழுவதும் செம்மரக்கட்டைகள் இருப்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.

உடனடியாக மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா தலைமையில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்தனர்.

லாரியில் பல லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. பதிவு எண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்ததாக இருந்ததால் ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரத்தை கடத்தி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போலீசார் விசாரணை

மேலும் லாரி நின்று கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரான தோட்டநாவலை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர் அந்த பகுதி தி.மு.க. கிளைச்செயலாளர். அவருக்கு தெரியாமல் அந்த லாரி இங்கு வந்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தால்தான் செம்மரக்கட்டைகளின் மதிப்பு என்ன என்பது தெரிய வரும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்