மாவட்ட செய்திகள்

கடையில் பொருட்கள் வாங்கியதில் தகராறு: விவசாயி அடித்துக்கொலை, போலீஸ் நிலையம் முற்றுகை

பெரியபாளையம் அருகே கடையில் பொருட்கள் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியபாளையம்,

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பெருமாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிரெட்டி (வயது 65). விவசாயி. இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், மாசிலாமணி, தங்கராஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர். மஞ்சுளா என்ற மகள் ஏற்கனவே இறந்துவிட்டார்.

காசிரெட்டி நேற்று அகரம் இருளர் காலனியில் உள்ள கடை ஒன்றில் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அவருக்கும், கடைக்காரர் செல்வத்துக்கும் (35) இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த செல்வம் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து காசிரெட்டியை பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்து விழுந்த காசிரெட்டி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து செல்வம் தப்பி ஓடினார்.

இந்த கொலை குறித்த தகவல் அறிந்ததும் காசிரெட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆரணி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் தப்பி ஓடிய செல்வத்தை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஊத்துக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தப்பி ஓடிய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதியளித்தனர். இதனால் சமரசம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் காசிரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அவர்கள், தப்பி ஓடிய செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடையில் பொருட்கள் வாங்கிய தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆரணி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு