மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு

செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் உள்ள விவசாய கிணற்றில் இறங்கி குளித்தனர்.

தாம்பரம்,

செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகன் ஜித்து என்ற சித்தேஷ்வரன் (வயது 20). இவர், செங்கல்பட்டு அரசு கலை கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் ஆகாஷ் (19). இவர், கோவையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் உள்ள விவசாய கிணற்றில் இறங்கி குளித்தனர். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் மூழ்கி பலியான இருவரது உடல்களையும் மீட்டனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு