மாவட்ட செய்திகள்

வடக்கு மண்டலத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக சிவகாஞ்சி தேர்வு: காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டத்தில், 12 போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது, பதிவேடுகளை பராமரிப்பது போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்டவைக்கு மதிப்பெண் அளிக்கப்படுகிறது. வடக்கு மண்டல போலீஸ் நிலையங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கூறியதாவது:-

சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில், பழைய குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என, பத்திரத்தில் எழுதி வாங்கி ஜாமீனில் வெளியில் விட்டது. பின்னர் அவர்களை கண்காணித்து தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை கண்டுபிடித்து அவர்களுக்கு பிடிவாரண்டு நிறைவேற்றியது அதிகம் நடந்துள்ளது. அதேபோல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் செய்தோரை கைது செய்யும் வகையில் பிடிவாரண்டு பிறப்பித்து நடவடிக்கை எடுத்தல், பாஸ்போர்ட்டு பெறுவதற்கான விசாரணையில் சிறப்பாக செயல்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அதிக மதிப்பெண் கிடைத்துள்ளதால், சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு