மாவட்ட செய்திகள்

மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு நண்பருக்கு வலைவீச்சு

மார்த்தாண்டம் அருகே மது குடிக்க பணம் கொடுக்காததால் மீன் பிடி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை,

மார்த்தாண்டம் வடக்கு தெரு குருவிக்காட்டு பகுதியில் வசித்து வருபவர் டதீஷ் (வயது 35), மீன் பிடி தொழிலாளி. இவரது மகளுக்கு நேற்று முன்தினம் பூப்புனித நீராட்டு விழா நடந்தது. அதையொட்டி விருந்து நடைபெற்றது.

இந்தநிலையில் டதீஷின் நண்பரான ஜோசப் என்பவர் மது குடிக்க ரூ.500 கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் டதீஷ் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

அரிவாள் வெட்டு

இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த ஜோசப், டதீஷின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்த டதீஷின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்பை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு