மாவட்ட செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் நிலையத்துக்கும், ஆனங்கூர் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் இறந்தவர், விழுப்புரம் மாவட்டம் கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் மகேஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. மகேஷ் கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

மகேசுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்துள்ள நிலையில் அந்த பெண்ணை பார்ப்பதற்காக அவர் சொந்த ஊர் செல்ல கேரளாவில் இருந்து ரெயிலில் பயணம் செய்தார். இவர் ரெயில் படிக்கட்டில் இருந்து பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த ரெயில் ஈரோடு அருகே சென்றபோது மகேஷ் எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு