மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கத்தில் டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கொளத்தூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொளத்தூர்,
கொளத்தூரை அடுத்த சின்னமேட்டூரை சேர்ந்தவர் சேட்டு என்ற ராமசாமி, டிரா க்டர் டிரைவர். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு மோகனா (19), கவுசல்யா (18) ஆகிய 2 மகள்களும், மேகநாதன் (15) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மேகநாதன் மாற்றுத்திறனாளி ஆவார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமசாமியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் இறந்து போனார். இதனால் ராமசாமியின் குழந்தைகள் 3 பேரும் தாளவாடி என்ற ஊரில் உள்ள சாந்தியின் தாயார் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மனைவி இறந்த துக்கத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் அங்கு விரைந்து வந்து ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த துக்கத்தில் டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு