மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஈஸ்டர் தினத்தையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன. இயேசு உயிர்த்தெழும் நேரத்தில் சிறப்பு பிரார்த்தனைகள், பாடல்கள் பாடப்பட்டது. கருமண்டபம், புனித மார்க் ஆலயம், அரிஸ்டோ ரவுண்டானா யோவான் ஆலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், மெயின் கார்டு கேட் புனித ஜோசப் பேராலயம், மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள தேவலாயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்குத்தந்தை சகாயராஜ், உதவி பங்குத்தந்தை மரியசூசை மற்றும் ஆயர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்து திருப்பலி நிறைவேற்றினர். இந்த ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிராத்தனையில் ஏராளமான பெண்கள், வாலிபர்கள், பெற்றோர், சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்