மாவட்ட செய்திகள்

அரியலூரில் கைத்தறி கண்காட்சி- சிறப்பு விற்பனை

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி, சிறப்பு விற்பனை முகாம் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல்கள் துறையின் சார்பில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி, சிறப்பு விற்பனை முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கண் காணிப்பு அலுவலரும் மற்றும் கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளருமான பணீந்திர ரெட்டி தலைமை தாங்கி கண்காட்சியையும், விற்பனை முகாமையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த விற்பனை முகாம் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், உதவி இயக்குனர் (கைத்தறி) திருநாவுகரசர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கைத்தறி கண்காட்சியில் கோடாலிக்கருப்பூர் ரக சேலைகள் உள்பட பல்வேறு ரக சேலைகள் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்